புற்றுநோய்க்கு சிகிச்சை பெறும் முன்னாள் குத்துச்சண்டை வீரருக்கு கொரோனா பாதிப்பு


புற்றுநோய்க்கு சிகிச்சை பெறும் முன்னாள் குத்துச்சண்டை வீரருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 1 Jun 2020 2:15 AM GMT (Updated: 1 Jun 2020 2:15 AM GMT)

புற்றுநோய்க்கு சிகிச்சை பெறும் முன்னாள் குத்துச்சண்டை வீரருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீரரான டிங்கோ சிங் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதத் தொடக்கத்தில் சிகிச்சைக்காக விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்ட அவர் சிகிச்சையை முடித்துக் கொண்டு சாலைமார்க்கமாக 2,400 கிலோமீட்டர் தூரம் பயணித்து சொந்த ஊரான மணிப்பூருக்கு திரும்பினார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. டெல்லியில் இருந்து மணிப்பூருக்கு கிளம்பிய போது அவருக்கு பாதிப்பு இல்லை. ஆனால் மணிப்பூருக்கு வந்தடைந்ததும் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது’ என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. 1998-ம் ஆண்டு பாங்காங் ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கத்தை வசப்படுத்திய 41 வயதான டிங்கோ சிங் பத்மஸ்ரீ மற்றும் அர்ஜூனா விருதுகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story