பார்முலா1 கார்பந்தயத்தின் முதல் 8 சுற்று ஆட்டங்களின் விவரம் அறிவிப்பு


பார்முலா1 கார்பந்தயத்தின் முதல் 8 சுற்று ஆட்டங்களின் விவரம் அறிவிப்பு
x
தினத்தந்தி 2 Jun 2020 11:06 PM GMT (Updated: 2 Jun 2020 11:06 PM GMT)

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயத்தின் முதல் 8 சுற்று ஆட்டங்களின் விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

* இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான பயிற்சி முகாம் தொடங்கியதும் அவர்கள் மீண்டும் போட்டிக்கு தயாராகுவதற்குரிய உடல்தகுதியை எட்டுவதற்கு 4 முதல் 6 வாரங்கள் பயிற்சி தேவை என்று இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்தார். படிப்படியாக தொடங்கி சற்று மிதமாக, தீவிரமாக, அதிதீவிரமாக என்று 4 விதமாக பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

* இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயத்தின் முதல் 8 சுற்று ஆட்டங்களின் விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. முதலாவது சுற்றாக ஆஸ்திரியா கிராண்ட்பிரி பந்தயம் அங்குள்ள ஸ்பைல்பெர்க் ஓடுதளத்தில் அடுத்த மாதம் (ஜூலை) 5-ந்தேதி அரங்கேறுகிறது. அதைத் தொடர்ந்து ஜூலை 12-ந்தேதி மேலும் ஒரு சுற்று அங்கேயே நடத்தப்படுகிறது. பின்னர் ஹங்கேரி கிராண்ட்பிரி ஜூலை 19-ந்தேதி நடக்கிறது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்தில் உள்ள சில்வர்ஸ்டோனில் ‘பிரிட்டிஷ் கிராண்ட்பிரி’ என்ற பெயரில் இரண்டு சுற்று போட்டி (ஆகஸ்டு 2 மற்றும் 9-ந்தேதி) நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஸ்பெயின், பெல்ஜியம், இத்தாலியிலும் திட்டமிட்டபடி போட்டி நடக்கிறது. அனைத்து போட்டிகளும் பூட்டிய ஸ்டேடியத்தில் ரசிகர்கள் இன்றி நடைபெறும்.

* கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மத்தியில் வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான போட்டி அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது. இதன்படி முதலாவது டெஸ்ட் ஜூலை 8-ந்தேதி சவுதம்டனில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் ஜூலை 16-ந்தேதியும், கடைசி டெஸ்ட் ஜூலை 24-ந்தேதியும் தொடங்கி நடக்கிறது. கடைசி இரு டெஸ்ட் போட்டியும் ஓல்டு டிராப்போர்டு மைதானத்தில் நடக்கிறது. ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story