பிற விளையாட்டு

தொடர் ஊரடங்கால் வருமானம் இன்றி ஆபாச பட நடிகையான பிரபல கார் பந்தய வீராங்கனை + "||" + Former V8 Supercars racer’s mammoth salary increase after career change

தொடர் ஊரடங்கால் வருமானம் இன்றி ஆபாச பட நடிகையான பிரபல கார் பந்தய வீராங்கனை

தொடர் ஊரடங்கால் வருமானம் இன்றி ஆபாச பட நடிகையான பிரபல கார் பந்தய வீராங்கனை
ஆஸ்திரேலியாவின் பிரபல கார் பந்தய வீராங்கனை ஒருவர் எதிர்கால போட்டிகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு, ஆபாச பட நடிகையாக களம் புகுந்துள்ளார்.
சிட்னி

கொரோனா பாதிப்பால் போடப்பட்ட ஊரடங்கால் உலகம் முழுவதும் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் மற்றும் பயிற்சிகள் முடங்கிப்போய் உள்ளன.

ஆஸ்திரேலியாவின் பிரபல கார் பந்தய வீராங்கனை ஒருவர் எதிர்கால போட்டிகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு, ஆபாச பட நடிகையாக களம் புகுந்துள்ளார்.கார் பந்தயங்களில் வருவாய் இழந்ததும், கொரோனாவால் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டதும் முக்கிய காரணமாக அவர் கூறுகிறார்.

ஆஸ்திரேலியாவில் வி8 சூப்பர் கார் போட்டிகளில் பிரபலமான ரெனி கிரேசி என்ற அழகி  கார் பந்தயங்களில் இருந்து விலகி தற்போது ஆபாச படங்களில் நடித்து வருகிறார். வி8 சூப்பர் கார் பந்தயங்களில் போட்டியை முழுமையாக நிறைவு செய்த முதல் பெண் ரெனி கிரேசி ஆவார்.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரை சேர்ந்த ரெனி, சர்வதேச பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் முதன் முறையாக தமது முடிவை அறிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியே தமது இந்த முடிவுக்கு காரணம் என குறிப்பிட்டுள்ள ரெனி, தமது குடும்பத்தாருடன் இது தொடர்பில் விவாதித்ததாகவும், அவர்களின் ஒப்புதலுடனே இந்த முடிவுக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.கார் பந்தயங்களில் இதுவரை தாம் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என கூறும் ரெனி, பொருளாதார ரீதியாகவும் பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போது வாரத்திற்கு 25,000 டாலர் வரை தம்மால் வருவாய் ஈட்ட முடிகிறது என கூறும் ரெனி,மாதம் 65,000 டாலர் முதல் 90,000 டாலர் வரை தாம் வருவாயாக ஈட்டி வருவதாக தெரிவித்துள்ளார்.ரெனி கிரேசி ஆபாச படத்தில் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அவரது இணையதள பக்கத்தில் ரசிகர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.வயது வந்தோருக்கான கட்டண தளம் ஒன்றிலேயே தற்போது ரெனி தமது புகைப்படங்களையும் காணொளிகளையும் பதிவேற்றம் செய்து வருகிறார்.