பிற விளையாட்டு

இந்திய தடகள அணியின் பயிற்சியாளர்பொறுப்பில் இருந்து விலகினார், பகதூர்சிங் + "||" + Bahadur Singh resigns as Indian athletics chief coach after 25 years

இந்திய தடகள அணியின் பயிற்சியாளர்பொறுப்பில் இருந்து விலகினார், பகதூர்சிங்

இந்திய தடகள அணியின் பயிற்சியாளர்பொறுப்பில் இருந்து விலகினார், பகதூர்சிங்
இந்திய தடகள அணியின் தலைமை பயிற்சியாளராக பகதூர்சிங் 1995-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
புதுடெல்லி,

இந்திய தடகள அணியின் தலைமை பயிற்சியாளராக பகதூர்சிங் 1995-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அது முதல் தொடர்ந்து 25 ஆண்டுகள் பயிற்சியாளராக செயல்பட்ட அவரது பதவி காலம் கடந்த வாரத்துடன் முடிவுக்கு வந்தது. அவரது ஒப்பந்தத்தை நீட்டிக்க மத்திய விளையாட்டு அமைச்சகம் மறுத்ததால் பொறுப்பில் இருந்து விலகி உள்ளார். பகதூர்சிங்குக்கு தற்போது 74 வயதாகிறது. 70 வயதுக்கு மேல் உள்ளவர்களை பயிற்சியாளராக அனுமதிக்கக்கூடாது என்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படவில்லை.


குண்டு எறிதல் வீரரான பகதுர்சிங் 1978 மற்றும் 1982-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றவர் ஆவார். அர்ஜூனா, துரோணாச்சார்யா, பத்மஸ்ரீ ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.

அவரது நீண்ட கால பணியினை பாராட்டியுள்ள இந்திய தடகள சம்மேளன தலைவர் அடில் சுமரிவாலா, ‘இந்திய தடகளத்துக்கு பகதூர்சிங் அளித்த மிகப்பெரிய பங்களிப்பை எப்போதும் நினைவில் கொள்வோம். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய தடகள அணியுடன் அவர் இருப்பதை பார்க்க விரும்பினோம். ஆனால் ஒலிம்பிக் போட்டி ஓராண்டுக்கு தள்ளிப்போனதால் அது நடக்காமல் போய் விட்டது. அவரது அனுபவத்தை நாங்கள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்வோம்’ என்றார். அவர் தடகள அணியின் ஆலோசகராக நியமிக்கப்படலாம் என்று தடகள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.