பிற விளையாட்டு

விளையாட்டு துளிகள்... + "||" + Game Droplets

விளையாட்டு துளிகள்...

விளையாட்டு துளிகள்...
சாம்பியன் பட்டத்தை வென்றவரான ஸ்பெயின் வீரர் பெர்னாண்டோ அலோன்சா 2018-ம் ஆண்டு இறுதியில் ஓய்வு பெற்றார்.
* பார்முலா1 கார்பந்தயத்தில் 2005, 2006-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்றவரான ஸ்பெயின் வீரர் பெர்னாண்டோ அலோன்சா 2018-ம் ஆண்டு இறுதியில் ஓய்வு பெற்றார். இந்த நிலையில் 2021-ம் ஆண்டு சீசனில் மீண்டும் பார்முலா1 கார்பந்தயத்திற்கு திரும்ப உள்ளதாக நேற்று அவர் அறிவித்தார். 38 வயதான அலோன்சா ரெனல்ட் அணிக்காக மறுபடியும் களம் காண ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


* தற்போதைய இந்திய அணியில் இருந்து உங்கள் டெஸ்ட் அணிக்கு 5 வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றால் யாரை விரும்புவீர்கள் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் விராட் கோலி, ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ஆர்.அஸ்வின் ஆகியோரின் பெயர்களை பட்டியலிட்டார்.