‘தேசிய விளையாட்டு சங்க நிர்வாகத்தில் பெண்களுக்கு உரிய பங்களிக்க வேண்டும்’- இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச்செயலாளர் வலியுறுத்தல்


‘தேசிய விளையாட்டு சங்க நிர்வாகத்தில் பெண்களுக்கு உரிய பங்களிக்க வேண்டும்’- இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச்செயலாளர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 July 2020 10:00 PM GMT (Updated: 13 July 2020 7:05 PM GMT)

தேசிய விளையாட்டு சங்க நிர்வாகத்தில் பெண்களுக்கு உரிய பங்களிக்க வேண்டும் என்று இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச்செயலாளர் வலியுறுத்தி உள்ளார்.

புதுடெல்லி, 

தேசிய விளையாட்டு சங்கங்களின் நிர்வாக பொறுப்பில் பெண்களுக்கு உரிய பங்களிப்பு அளிக்க தேவையான திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்று இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தா வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் ஒலிம்பிக் சங்க நிர்வாகிகளுக்கு எழுதி இருக்கும் கடிதத்தில், 

‘இந்திய ஒலிம்பிக் சங்க பொதுக்குழுவில் தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் சார்பில் இடம் பெறும் பிரநிதிகளில் மூன்றில் ஒருவர் பெண்ணாக இருக்கும் வகையில் விதிமுறையில் மாற்றம் கொண்டு வந்து அமல்படுத்த இந்திய ஒலிம்பிக் சங்க செயற்குழு உறுப்பினர்கள் ஆதரவு அளிக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மாற்றத்துக்கான இந்த முயற்சியை நாம் மேற்கொண்டால் பல்வேறு தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் தங்களது நிர்வாக அமைப்பில் மாற்றம் செய்வதுடன், பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கொடுக்கும் என்று நம்புகிறேன். 

இந்த விஷயத்தில் சில தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் குறிப்பிடத்தக்க நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள். ஆனாலும் சர்வதேச அளவில் ஈடுகொடுக்க நாம் இன்னும் கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானதாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story