பிற விளையாட்டு

பார்முலா1 கார்பந்தயம்: இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் வெற்றி + "||" + Formula 1 car racing: England's Lewis Hamilton wins

பார்முலா1 கார்பந்தயம்: இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் வெற்றி

பார்முலா1 கார்பந்தயம்: இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் வெற்றி
பார்முலா1 கார்பந்தயப் போட்டியில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் வெற்றிபெற்றார்.

* கிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் லிஸ்பன் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த கடைசி கால்இறுதி ஆட்டத்தில் லயன் அணி (பிரான்ஸ்) 3-1 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டியை (இங்கிலாந்து) தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறியது. அரைஇறுதி ஆட்டங்களில் லயன்-பேயர்ன் முனிச், லெப்ஜிக்- பி.எஸ்.ஜி. அணிகள் மோதுகின்றன.

* பார்முலா1 கார்பந்தயத்தின் 6-வது சுற்றான ஸ்பெயின் கிராண்ட்பிரி அங்குள்ள கேட்டலுன்யா ஓடுதளத்தில் நேற்று நடந்தது. 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் கலந்து கொண்ட இந்த பந்தயத்தில் 307.104 கிலோமீட்டர் தூர இலக்கை 1 மணி 31 நிமிடம் 45.279 வினாடிகளில் கடந்து இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் வெற்றி பெற்று 25 புள்ளிகளை தட்டிச் சென்றார். நடப்பு சாம்பியனான ஹாமில்டன் இந்த சீசனில் ருசித்த 4-வது வெற்றி இதுவாகும். அவரை விட 24.17 வினாடி பின்தங்கிய மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (நெதர்லாந்து) 2-வதாகவும், வால்டெரி போட்டாஸ் (பின்லாந்து) 3-வதாகவும் வந்தனர். 7-வது சுற்று போட்டி வருகிற 30-ந்தேதி பெல்ஜியத்தில் நடக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பார்முலா1 கார்பந்தயம்: ஷூமாக்கரின் சாதனையை சமன் செய்தார், ஹாமில்டன்
பார்முலா1 கார்பந்தயம்: ஷூமாக்கரின் சாதனையை சமன் செய்தார், ஹாமில்டன்
2. பார்முலா1 கார்பந்தயம்: ஹாமில்டன் வெற்றி
பார்முலா1 கார்பந்தயத்தில் ஹாமில்டன் வெற்றி பெற்றுள்ளார்.