பிற விளையாட்டு

விளையாட்டு துளிகள்... + "||" + sports Drops

விளையாட்டு துளிகள்...

விளையாட்டு துளிகள்...
கொரோனா அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதத்துக்கு பிறகு நியூசிலாந்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை.
* கொரோனா அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதத்துக்கு பிறகு நியூசிலாந்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. தற்போது அங்கு சர்வதேச கிரிக்கெட் போட்டியை கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடத்த அந்த நாட்டு அரசு பச்சைக்கொடி காட்டி இருக்கிறது. இதனை அடுத்து நவம்பர் மாதம் முதல் வெஸ்ட்இண்டீஸ் அணியும், அடுத்து பாகிஸ்தான் அணியும் நியூசிலாந்து சென்று டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுகிறது. இதற்கான போட்டி அட்டவணை அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.


* ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியா சென்று ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட திட்டமிட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணியும் அங்கு சென்று 3 ஒருநாள் போட்டியில் மோத இருந்தது. இந்த இரண்டு போட்டி தொடர்களும் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.


தொடர்புடைய செய்திகள்

1. விளையாட்டு துளிகள்
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் அபுதாபியில் நேற்று முன்தினம் இரவு நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் களம் இறங்கவில்லை.
2. விளையாட்டு துளிகள்
பார்முலா1 கார்பந்தயத்தின் 11-வது சுற்றான இபெல் கிராண்ட்பிரி போட்டி ஜெர்மனியின் நுர்பர்க் நகரில் இன்று நடக்கிறது.
3. விளையாட்டு துளிகள்
டெல்லியில் உள்ள கர்னிசிங் துப்பாக்கி சுடுதல் ரேஞ்சில் வருகிற 15-ந் தேதி முதல் டிசம்பர் 14-ந் தேதி வரை நடைபெறும் என்று இந்திய விளையாட்டு ஆணையம் நேற்று அறிவித்தது.
4. விளையாட்டு துளிகள்......
மார்ச் 24-ந் தேதியில் இருந்து நாடு முழுவதும் நீச்சல் குளங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
5. விளையாட்டு துளிகள்....
இந்த ஐ.பி.எல். கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லும் என்று நம்புகிறேன் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.