துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 6 Oct 2020 11:11 PM GMT (Updated: 6 Oct 2020 11:11 PM GMT)

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஓடென்ஸ் நகரில் வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது.

* டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஓடென்ஸ் நகரில் வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் இருந்து இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், அவரது கணவரும் உலக தரவரிசையில் 24-வது இடத்தில் இருப்பவருமான காஷ்யப் ஆகியோர் விலகி உள்ளனர். ஜனவரி மாதம் நடைபெறும் ஆசிய சுற்றுப்பயண போட்டியில் இருந்து மீண்டும் விளையாட தொடங்கலாம் என்று முடிவு செய்திருப்பதாக சாய்னா தெரிவித்தார்.

* கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் வாசிம் ஜாபர் நேற்று அளித்த பேட்டியில் ‘அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல், சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ஜட்ரான் ஆகியோரை நாங்கள் விரைவில் களம் இறக்க வேண்டும். ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேற எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியான நிலை உருவாகும் முன்பே அவர்களை விளையாட வைக்க வேண்டும். கெய்ல் நல்ல நிலையில் இருக்கிறார். அவர் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவார்.’ என்றார்.

* ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகி விட்டார். அவருக்கு பதிலாக ஆந்திராவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் பிரித்வி ராஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் 11 முதல்தர போட்டியில் விளையாடி 39 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். கடந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடிய பிரித்வி ராஜ் 2 ஆட்டத்தில் களம் இறங்கி ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

Next Story