பிற விளையாட்டு

இந்திய மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் சந்தோஷ் படுகாயம் + "||" + Indian motorcycle racer Santosh injured

இந்திய மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் சந்தோஷ் படுகாயம்

இந்திய மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் சந்தோஷ் படுகாயம்
கரடு முரடான பாதைகளில் நடைபெறும் சவால் நிறைந்த சர்வதேச மோட்டார் சைக்கிள் பந்தயம் சவூதி அரேபியாவில் நடந்து வருகிறது.
புதுடெல்லி, 

கரடு முரடான பாதைகளில் நடைபெறும் சவால் நிறைந்த சர்வதேச மோட்டார் சைக்கிள் பந்தயம் சவூதி அரேபியாவில் நடந்து வருகிறது. இதில் 4-வது சுற்று பந்தயத்தில் கற்கள் நிறைந்த பாதையில் செல்லுகையில் இந்திய வீரர் சந்தோஷ் விபத்தில் சிக்கினார். இதில் கர்நாடகாவை சேர்ந்த 37 வயதான சந்தோஷ்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 

உடனடியாக அவர் விமானம் மூலம் ரியாத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தோஷ் உடல் நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும் அவர் பங்கேற்று இருக்கும் ஹீரோ மோட்டா ஸ்போர்ட்ஸ் நிறுவனம் டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளது.