பிற விளையாட்டு

உலக பேட்மிண்டன்: சிந்து ஆறுதல் வெற்றி + "||" + World Badminton: Indus consolation win

உலக பேட்மிண்டன்: சிந்து ஆறுதல் வெற்றி

உலக பேட்மிண்டன்: சிந்து ஆறுதல் வெற்றி
உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டியில் சிந்து ஆறுதல் வெற்றி பெற்றார்.
பாங்காக், 

உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் ‘பி’ பிரிவில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் உலக சாம்பியனும், தரவரிசையில் 7-வது இடத்தில் இருப்பவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 13-ம் நிலை வீராங்கனை தாய்லாந்தின் போர்ன்பவீ சோச்சுவோங்கை சந்தித்தார். 42 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் சிந்து 21-18, 21-15 என்ற நேர்செட்டில் போர்ன்பவீயை தோற்கடித்தார். முதல் 2 ஆட்டங்களில் தோல்வி கண்டு அரைஇறுதி வாய்ப்பை இழந்து விட்ட சிந்துவுக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது.

ஆண்கள் ஒற்றையர் ‘பி’ பிரிவில் நடந்த இறுதி லீக் ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-12, 18-21, 19-21 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் நிகா லாங் அங்குஸ்சிடம் போராடி வீழ்ந்தார். இந்த ஆட்டம் ஒரு மணி 5 நிமிடம் நீடித்தது. ஸ்ரீகாந்த் தொடர்ச்சியாக 3-வது தோல்வியை சந்தித்து நடையை கட்டினார்.