பிற விளையாட்டு

மாநில பெண்கள் கைப்பந்து: தொடக்க ஆட்டத்தில் சேலம் அணி வெற்றி + "||" + State Women's Volleyball: Salem win the opening match

மாநில பெண்கள் கைப்பந்து: தொடக்க ஆட்டத்தில் சேலம் அணி வெற்றி

மாநில பெண்கள் கைப்பந்து: தொடக்க ஆட்டத்தில் சேலம் அணி வெற்றி
மாநில பெண்கள் கைப்பந்து போட்டியில் தொடக்க ஆட்டத்தில் சேலம் அணி வெற்றி பெற்றது.
சென்னை, 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில பெண்கள் கைப்பந்து போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா போட்டியை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு கைப்பந்து சங்க பொதுச்செயலாளர் ஏ.ஜே.மார்ட்டின் சுதாகர் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர். நாளை வரை நடைபெறும் இந்த போட்டியில் மொத்தம் 37 அணிகள் பங்கேற்றுள்ளன.

தொடக்க ஆட்டத்தில் சேலம் மாவட்ட அணி 25-5, 25-8 என்ற நேர்செட்டில் வேலூரை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் செங்கல்பட்டு அணி 25-3, 25-3 என்ற நேர்செட்டில் கரூரை விரட்டியடித்தது. இன்னொரு ஆட்டத்தில் மதுரை 25-9, 25-16 என்ற நேர்செட்டில் திருவண்ணாமலையை வீழ்த்தியது. மற்ற ஆட்டங்களில் திண்டுக்கல், ஈரோடு, சென்னை, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, திருப்பூர் அணிகள் வெற்றி பெற்றன.