பிற விளையாட்டு

மாநில பெண்கள் கபடி: திண்டுக்கல் அணி வெற்றி + "||" + State Women's Kabaddi: Dindigul team wins

மாநில பெண்கள் கபடி: திண்டுக்கல் அணி வெற்றி

மாநில பெண்கள் கபடி: திண்டுக்கல் அணி வெற்றி
மாநில பெண்கள் கபடி போட்டியில் திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது.
சென்னை,

47-வது ஜூனியர் பெண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை ராணி மேரி கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது. தொடக்க விழாவில் தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்க தலைவர் சோலை எம்.ராஜா, பொதுச்செயலாளர் ஏ.ஷபியுல்லா, சென்னை மாவட்ட கபடி சங்க செயலாளர் கோல்டு எம்.ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

இதன் லீக் ஆட்டம் ஒன்றில் திண்டுக்கல் அணி 18-11 என்ற புள்ளி கணக்கில் தஞ்சாவூரை தோற்கடித்தது. மற்ற ஆட்டங்களில் நெல்லை அணி 16-11 என்ற புள்ளி கணக்கில் திருச்சியையும், சேலம் அணி 26-17 என்ற புள்ளி கணக்கில் கள்ளக்குறிச்சியையும், தர்மபுரி அணி 25-12 என்ற புள்ளி கணக்கில் திருவள்ளூரையும் வீழ்த்தின. இன்று மாலை இறுதிப்போட்டி நடக்கிறது.