பிற விளையாட்டு

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் தீபக்குமாருக்கு வெள்ளிப்பதக்கம் + "||" + Indian boxer Deepak Kumar wins silver in international boxing

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் தீபக்குமாருக்கு வெள்ளிப்பதக்கம்

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் தீபக்குமாருக்கு வெள்ளிப்பதக்கம்
சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் தீபக்குமாருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
புதுடெல்லி, 

சர்வதேச குத்துச்சண்டை போட்டி பல்கேரியாவில் உள்ள சோபியா நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் 52 கிலோ எடைப்பிரிவின் இறுதிஆட்டத்தில் இந்திய வீரர் தீபக்குமார், ஐரோப்பிய சாம்பியனான டேனியல் அசெனோவை (பல்கேரியா) எதிர்கொண்டார். 

இருவரும் சளைக்காமல் குத்துகளை விட்டனர். தடுப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். முடிவில் நடுவர்களின் தீர்ப்பின்படி அசெனோவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதனால் தீபக்குமார் வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று. முன்னதாக 69 கிலோ பிரிவில் இந்திய வீரர் நவீன் பூரா வெண்கலப்பதக்கம் பெற்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் உலக சாம்பியனை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் தீபக்குமார்
சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் தீபக்குமார் உலக சாம்பியனை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.