பிற விளையாட்டு

தேசிய சப்-ஜூனியர் கைப்பந்து: அரியானா அணி ‘சாம்பியன்’ + "||" + National sub-junior volleyball: Haryana 'champion'

தேசிய சப்-ஜூனியர் கைப்பந்து: அரியானா அணி ‘சாம்பியன்’

தேசிய சப்-ஜூனியர் கைப்பந்து: அரியானா அணி ‘சாம்பியன்’
43-வது தேசிய சப்-ஜூனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் 26 அணிகளும், பெண்கள் பிரிவில் 17 அணிகளும் பங்கேற்றன.
சென்னை,

43-வது தேசிய சப்-ஜூனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் 26 அணிகளும், பெண்கள் பிரிவில் 17 அணிகளும் பங்கேற்றன. இதன் ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் அரியானா அணி 25-13, 25-13, 21-25, 25-19 என்ற செட் கணக்கில் குஜராத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் உத்தரபிரதேச அணி 25-16, 22-25, 25-15, 16-25, 15-10 என்ற செட் கணக்கில் ராஜஸ்தானை போராடி சாய்த்தது. பெண்கள் பிரிவில் இறுதிப்போட்டியில் மேற்கு வங்காள அணி 25-21, 25-13, 25-13 என்ற நேர்செட்டில் ராஜஸ்தானை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் அரியானா அணி 18-25, 25-23, 25-14, 17-25, 15-13 என்ற செட் கணக்கில் தமிழகத்தை வீழ்த்தியது. பரிசளிப்பு விழாவில் இந்திய கைப்பந்து சம்மேளன சேர்மன் எஸ்.வாசுதேவன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பையை வழங்கினார். போட்டி அமைப்பு குழு செயலாளர் சத்யராஜ் உள்பட நிர்வாகிகள் விழாவில் கலந்து கொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

1. 10 அணிகள் பங்கேற்கும் சென்னை மாவட்ட ‘ஏ’ டிவிசன் கைப்பந்து போட்டி நாளை தொடக்கம்
சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் டாக்டர் ரேலா மருத்துவ மையம், ஆச்சி குரூப் ஆப் கம்பெனிகள் ஆதரவுடன் சென்னை மாவட்ட ‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக் சாம்பியன்ஷிப் போட்டி நாளை (செவ்வாய்கிழமை) முதல் 10-ந்தேதி வரை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடக்கிறது.
2. முஷ்டாக் அலி கிரிக்கெட் சாம்பியன்: தமிழக அணி வீரர்கள் அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவார்கள்
தமிழக அணி வீரர்கள் அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவார்கள் கேப்டன் தினேஷ் கார்த்திக் நம்பிக்கை.
3. திருக்கோவிலூர் அருகே மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
திருக்கோவிலூர் அருகே மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் பரிசு வழங்கினார்.