‘ஏ’ டிவிசன் கைப்பந்து: சுங்க இலாகா வெற்றி


‘ஏ’ டிவிசன் கைப்பந்து: சுங்க இலாகா வெற்றி
x
தினத்தந்தி 7 March 2021 12:40 AM GMT (Updated: 7 March 2021 12:40 AM GMT)

‘ஏ’ டிவிசன் கைப்பந்து போட்டியில் சுங்க இலாகா வெற்றி பெற்றது.

சென்னை, 

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் டாக்டர் ரேலா மருத்துவ மையம் மற்றும் ஆச்சி குரூப் நிறுவனங்கள் ஆதரவுடன் ‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் சுங்க இலாகா 25-23, 25-22, 25-22 என்ற நேர்செட்டில் ஐ.சி.எப். அணியை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 25-20, 25-19, 25-22 என்ற நேர்செட்டில் செயின்ட் ஜோசப்ஸ் அணியை வீழ்த்தியது. இதே போல் எஸ்.ஆர்.எம். அணி 20-25, 25-22, 25-21, 25-16 என்ற செட் கணக்கில் இந்தியன் வங்கியை சாய்த்தது.

இன்று நடைபெறும் ஆட்டங்களில் தமிழ்நாடு போலீஸ்-செயின்ட் ஜோசப்ஸ் (மாலை 4.30 மணி), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி-சுங்க இலாகா, பனிமலர்-ஐ.சி.எப். அணிகள் மோதுகின்றன.

Next Story