பிற விளையாட்டு

உலக ரேங்கிங் டேபிள் டென்னிஸ்: இந்திய வீரர் சரத்கமல் வெற்றி + "||" + Achanta Sharath Kamal Downs World Number 16; G Sathiyan, Manika Batra Lose

உலக ரேங்கிங் டேபிள் டென்னிஸ்: இந்திய வீரர் சரத்கமல் வெற்றி

உலக ரேங்கிங் டேபிள் டென்னிஸ்: இந்திய வீரர் சரத்கமல் வெற்றி
உலக ரேங்கிங் டேபிள் டென்னிஸ் போட்டியில், இந்திய வீரரான சென்னையை சேர்ந்த சரத்கமல் கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
தோகா, 

உலக ரேங்கிங் டேபிள் டென்னிஸ் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 32-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரரான சென்னையை சேர்ந்த சரத்கமல் 12-10, 3-11, 11-7, 7-11, 11-9 என்ற செட் கணக்கில் 16-வது இடத்தில் உள்ள பாட்ரிக் பிரான்ஜிஸ்காவை (ஜெர்மனி) வீழ்த்தி கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

இந்திய வீரர் சத்யன், வீராங்கனை மனிகா பத்ரா ஆகியோர் தங்களது 2-வது சுற்றில் தோல்வி கண்டு வெளியேறினார்கள்.