பிற விளையாட்டு

கொரோனா பாதிப்பு எதிரொலி: ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டியில் இருந்து இந்திய ஜூடோ அணி விலகல் + "||" + Indian Judo Team Withdraws From Olympic Qualifiers After Two Players Test COVID-19 Positive

கொரோனா பாதிப்பு எதிரொலி: ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டியில் இருந்து இந்திய ஜூடோ அணி விலகல்

கொரோனா பாதிப்பு எதிரொலி: ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டியில் இருந்து இந்திய ஜூடோ அணி விலகல்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி சுற்றான ஆசிய ஓசியானா ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி கிர்கிஸ்தான் நாட்டில் உள்ள பிஷ்கெக் நகரில் நடந்து வருகிறது.

இந்த போட்டியில் பங்கேற்க 15 வீரர், வீராங்கனைகள் உள்பட 19 பேர் கொண்ட இந்திய அணி அங்கு சென்றுள்ளது. போட்டிக்கு முன்னதாக நடத்தப்பட்ட 2-வது கொரோனா பரிசோதனையில் இந்திய அணியின் இடம் பெற்றுள்ள அஜய் யாதவ் (73 கிலோ), ரிது (52 கிலோ) ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த போட்டியில் இருந்து இந்திய அணி விலகியது. அணியில் ஒரு வீரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும், மொத்த அணியும் போட்டியில் பங்கேற்க அனுமதி கிடையாது என்ற விதிமுறை இருப்பதால் ஒட்டுமொத்த இந்திய அணியும் விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

கொரோனாவில் சிக்கிய 2 பேரும் ஓட்டல் அறையில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். அத்துடன் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். கொரோனா பாதிப்புக்கு ஆளாகாதவர்கள் விரைவில் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று இந்திய விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் - சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தகவல்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.