பிற விளையாட்டு

ஆசிய குத்துச்சண்டை போட்டிக்கான இந்திய அணியில் மேரிகோம் + "||" + Mary Kom, Lovlina in India's women's boxing squad for Asian Championships

ஆசிய குத்துச்சண்டை போட்டிக்கான இந்திய அணியில் மேரிகோம்

ஆசிய குத்துச்சண்டை போட்டிக்கான இந்திய அணியில் மேரிகோம்
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் வருகிற 21-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 6 முறை உலக சாம்பியனும், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருப்பவருமான மேரிகோம் உள்பட 10 பேர் அணியில் இடம் பிடித்துள்ளனர். இந்திய அணி வருமாறு:-

மோனிகா (48 கிலோ உடல் எடைப்பிரிவு), மேரிகோம் (51 கிலோ), சாக்‌ஷி (54 கிலோ), ஜாஸ்மின் (57 கிலோ), சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ), பிலாவ் பாசுமதாரி (64 கிலோ), லவ்லினா போர்கோஹைன் (69 கிலோ), பூஜாராணி (75 கிலோ), சவீட்டி (81 கிலோ), அனுப்மா (81 கிலோவுக்கு மேல்).