பிற விளையாட்டு

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: வினேஷ் உள்பட 3 பேருக்கு தங்கம் + "||" + Asian Wrestling Championship Including Vinesh Gold for 3 people

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: வினேஷ் உள்பட 3 பேருக்கு தங்கம்

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: வினேஷ் உள்பட 3 பேருக்கு தங்கம்
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தான் நாட்டில் உள்ள அல்மாதி நகரில் நடந்து வருகிறது.
இதில் பெண்களுக்கான 53 கிலோ உடல் எடைப்பிரிவில் நேற்று நடந்த இறுதிசுற்றில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 6-0 என்ற கணக்கில் மெங் சுவான் ஹிசை (சீனதைபே) தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். டோக்கியோ ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றவரான வினேஷ் போகத் ஆசிய விளையாட்டில் மகுடம் சூடியிருப்பது இதுவே முதல்முறையாகும். 57 கிலோ பிரிவில் 19 வயதான இந்தியாவின் அன்ஷூமாலிக் 3-0 என்ற புள்ளி கணக்கில் அல்டான்செட்செக்கை (மங்கோலியா) அடக்கி முதல்முறையாக தங்கப்பதக்கத்தை ருசித்தார். இதே போல் இந்தியாவின் திவ்யா கக்ரன் (72 கிலோ) கஜகஸ்தானின் ஜாமிலாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். அதே சமயம் 65 கிலோ பிரிவில் இ்ந்தியாவின் சாக்‌ஷி மாலிக் 0-4 என்ற கணக்கில் போலோர்டுங்கலாக்கிடம் (மங்கோலியா) தோற்று வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.