பிற விளையாட்டு

உலக இளையோர் குத்துச்சண்டை: 4 இந்திய வீராங்கனைகள் தங்கம் வென்றனர் + "||" + World Youth Boxing: 4 Indian wins gold

உலக இளையோர் குத்துச்சண்டை: 4 இந்திய வீராங்கனைகள் தங்கம் வென்றனர்

உலக இளையோர் குத்துச்சண்டை: 4 இந்திய வீராங்கனைகள் தங்கம் வென்றனர்
உலக இளையோர் குத்துச்சண்டை போட்டி போலந்து நாட்டில் நடந்து வருகிறது.

இதில் பெண்களுக்கான 48 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை ஜித்திகா 5-0 என்ற கணக்கில் போலந்தின் நாதலியா குக்சிஸ்காவை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். 51 கிலோ எடைப்பிரிவு இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பேபிரோஜிசனா சானு 5-0 என்ற கணக்கில் ரஷியாவின் வாலெரியா லின்கோவாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதேபோல் இந்திய வீராங்கனைகள் பூனம் (57 கிலோ), வின்கா (60 கிலோ) ஆகியோரும் தங்கள் பிரிவில் தங்கத்தை அறுவடை செய்தனர்.