டோக்கியோ ஒலிம்பிக் திட்டமிட்டபடி நடக்கும்; சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி துணைத்தலைவர் ஜான் கோயட்ஸ் உறுதி


டோக்கியோ ஒலிம்பிக் திட்டமிட்டபடி நடக்கும்; சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி துணைத்தலைவர் ஜான் கோயட்ஸ் உறுதி
x
தினத்தந்தி 9 May 2021 5:59 AM GMT (Updated: 2021-05-09T11:29:19+05:30)

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க இருந்தது.

 கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட இந்த ஒலிம்பிக் போட்டி வருகிற ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை டோக்கியோவில் நடக்கிறது. ஆனால் மறுபடியும் கொரோனா பரவல் உச்சத்தை எட்டியிருப்பதால் ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் துணைத் தலைவரும், ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டி தலைவருமான ஜான் கோயட்சிடம், தற்போதைய சூழலில் ஒலிம்பிக் போட்டி தள்ளிவைக்கப்படவோ அல்லது ரத்தாகவோ வாய்ப்பு உள்ளதா என்று கேட்ட போது, ‘இல்லை, அதற்கு வாய்ப்பே இல்லை’ என்று உறுதிப்பட கூறினார்.

‘எல்லாவிதமான கொரோனா தடுப்பு பாதுகாப்பு அம்சங்களையும் மேற்கொள்ள நாங்கள் ஜப்பான் அரங்சாங்கத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். எல்லாம் சரியாக சென்று கொண்டிருக்கிறது. கொரோனா தடுப்புக்கு தேவையான நடவடிக்கைகளை செயல்படுத்துவோம். இங்கு தடுப்பூசி தேவை இருக்காது என்று அவர்கள் கணித்துள்ளனர். நிலைமையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. ஒலிம்பிக் திட்டமிட்டபடி நடக்கும்’ என்றும் அவர் கூறினார்.


Next Story