பிற விளையாட்டு

மில்கா சிங் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி பிரதமர் மோடி நலம் விசாரித்தார் + "||" + Milkha Singh admitted back to hospital Prime Minister Modi inquired about his health

மில்கா சிங் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி பிரதமர் மோடி நலம் விசாரித்தார்

மில்கா சிங் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி பிரதமர் மோடி நலம் விசாரித்தார்
மில்கா சிங் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.
சண்டிகார்,

ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவரும், பிரபல முன்னாள் ஓட்டப்பந்தய வீரருமான 91 வயது மில்கா சிங் கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொகாலியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அவரது உடல் நிலை சீரானதை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினார். இந்த நிலையில் அவருக்கு மீண்டும் ஆக்சிஜன் அளவு குறைந்ததால் சண்டிகாரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல் நிலை முன்பை விட நன்றாகவும், நிலையாகவும் இருப்பதாக சண்டிகார் அரசு மருத்துவமனையின் செய்தி தொடர்பாளர் பேராசிரியர் அசோக் குமார் தெரிவித்தார். இதற்கிடையே பிரதமர் மோடி நேற்று டெலிபோன் மூலம் மில்காசிங்கை தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்தார். இதற்காக பிரதமருக்கு மில்கா சிங்கின் மகன் ஜீவ் மில்காசிங் டுவிட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் ரூ.4 ஆயிரம் கோடியில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் காணொலி காட்சி வழியாக மோடி திறந்துவைத்தார்
தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி காணொலி காட்சி வழியாக திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி பங்கேற்றார்.
2. “மோடி கூறியிருந்தால் வழியில் இருந்து விலகி இருப்போம்” - விவசாயிகள் விளக்கம்
பிரதமர் மோடி யாரையாவது அனுப்பி வைத்து வழிவிட அறிவுறுத்தியிருந்தால் அவரது பாதையில் தடையாக இருந்திருக்க மாட்டோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.
3. மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பொங்கல் விழா தள்ளிவைப்பு..!!
கொரோனா, ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு காரணமாக, மதுரையில் 12-ந்தேதி பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பொங்கல் விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
4. பிரதமர் மோடியுடன் மத்திய ஆசிய நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு..!!
பிரதமர் மோடியை 5 மத்திய ஆசிய நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டாக சந்தித்து பேசினர்.
5. ரூ.8 ஆயிரம் கோடி விமானத்தில் பறக்கும் மோடியால் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியவில்லை: பிரியங்கா காந்தி
ரூ.8 ஆயிரம் கோடி விமானத்தில் பறக்கும் மோடியால் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியவில்லை என்று பிரியங்கா காந்தி பேசினார்.