பெங்களூருவில் வருகிற 14-ந் தேதி வரை 144 தடை நீட்டிப்பு


பெங்களூருவில் வருகிற 14-ந் தேதி வரை 144 தடை நீட்டிப்பு
x
தினத்தந்தி 5 Jun 2021 7:08 PM GMT (Updated: 5 Jun 2021 7:08 PM GMT)

கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.


பெங்களூரு, 

கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பெங்களூருவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனாலும் மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால், பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் வருகிற 14-ந் தேதி காலை வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு காலை 6 மணியில் இருந்து காலை 10 மணிவரை பொதுமக்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக பெங்களூருவில் அமல்படுத்தப்பட்டு இருந்த 144 தடை உத்தரவு நாளை (திங்கட்கிழமை) காலையுடன் நிறைவு பெறுகிறது. ஏற்கனவே மாநிலம் முழுவதும் ஊரடங்கு வருகிற 14-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், பெங்களூருவில் 144 தடை உத்தரவும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது வருகிற 14-ந் தேதி காலை 6 மணி வரை பெங்களூருவில் 144 தடை உத்தரவை நீட்டித்து போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நேற்று அறிவித்துள்ளார்.


Next Story