உசேன் போல்ட்டின் இரட்டைக் குழந்தைகளின் பெயர்கள்: இணையத்தில் வைரல்


உசேன் போல்ட்டின் இரட்டைக் குழந்தைகளின் பெயர்கள்: இணையத்தில் வைரல்
x
தினத்தந்தி 22 Jun 2021 12:17 AM GMT (Updated: 2021-06-22T05:47:04+05:30)

ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனையாளரான உசேன் போல்டின் இரட்டைக் குழந்தைகளின் பெயர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனையாளரும், தொடர்ந்து 3 ஒலிம்பிக் (2008, 2012, 2016) போட்டிகளில் 100, 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்று சரித்திரம் படைத்தவருமான ஜமைக்காவை சேர்ந்த 34 வயது முன்னாள் தடகள வீரரான உசைன் போல்ட் மற்றும் அவருடைய மனைவி காசி பென்னெட் ஆகியோர் தந்தையர் தினத்தையொட்டி தங்களது குடும்ப புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு இருக்கின்றனர். 

அதில் தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்து இருப்பதை உலகத்துக்கு அறிவித்துள்ளனர். அந்த குழந்தைகளுக்கு தண்டர் போல்ட், செயின்ட் லியோ போல்ட் என்று பெயர் சூட்டப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால் குழந்தை பிறந்த தேதி குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. இந்த தம்பதிக்கு ஒலிம்பிக் லைட்னிங் என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது நினைவிருக்கலாம்.
Next Story