பிற விளையாட்டு

ஒலிம்பிக் போட்டிக்காக ஜப்பான் சென்ற உகாண்டா அணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா + "||" + Corona for one more member of the Ugandan team that went to Japan for the Olympics

ஒலிம்பிக் போட்டிக்காக ஜப்பான் சென்ற உகாண்டா அணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா

ஒலிம்பிக் போட்டிக்காக ஜப்பான் சென்ற உகாண்டா அணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா
ஒலிம்பிக் போட்டிக்காக ஜப்பான் சென்ற உகாண்டா அணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக உள்ளூர் சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
டோக்கியோ,

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக ஜப்பான் சென்றடைந்த 9 பேர் கொண்ட உகாண்டா அணியில் பயிற்சியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. உடனடியாக அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இந்த நிலையில் உகாண்டா அணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக உள்ளூர் சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த நபரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. கொரோனா தொற்று எதிரொலியாக அவருடன் நெருக்கமாக இருந்த மற்றவர்களும் ஜூலை 3-ந்தேதி வரை தனிமைப்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.