டோக்கியோ ஒலிம்பிக்கில் வீரர்களே பதக்கத்தை அணிந்து கொள்ள வேண்டும் - சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு


டோக்கியோ ஒலிம்பிக்கில் வீரர்களே பதக்கத்தை அணிந்து கொள்ள வேண்டும் - சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு
x
தினத்தந்தி 14 July 2021 7:40 PM GMT (Updated: 14 July 2021 7:40 PM GMT)

டோக்கியோ ஒலிம்பிக்கில் வீரர்களே பதக்கத்தை அணிந்து கொள்ள வேண்டும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

டோக்கியோ,

கொரோனா பரவல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டி கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அரங்கேற இருக்கிறது. ஏற்கனவே இந்த போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் இந்த ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு வழக்கம் போல் பதக்க அணிவிப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு வீரர், வீராங்கனைகளின் கழுத்தில் பதக்கத்தை அணிவித்து கவுரவிக்கும் நடைமுறை கடைப்பிடிக்கப்படுமா? என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேச்சிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். 

அப்போது அவர் பதிலளிக்கையில் ‘பதக்கம் வெல்பவர்களின் கழுத்தில் பதக்கம் அணிவிக்கபடமாட்டாது. பதக்க மேடையில் தட்டில் வைத்து பதக்கங்கள் வழங்கப்படும். அதனை அந்தந்த வீரர் அல்லது வீராங்கனைகளே எடுத்து தங்கள் கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும். பதக்கத்தை தட்டில் எடுத்து வைப்பவர் தொற்று பரவாத வகையில் கையுறை அணிந்து செயல்படுவார். பதக்கத்தை தட்டில் வைத்து வீரர்களிடம் கொண்டு கொடுப்பவரும், பதக்கத்தை பெறும் வீரர், வீராங்கனைகளும் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியின் போது கைகுலுக்கி வாழ்த்து தெரிவிக்கவோ, கட்டித்தழுவி பாராட்டவோ கூடாது’ என்றார்.

Next Story