பிற விளையாட்டு

டோக்கியோவில் வெளிநாட்டு அணியை சேர்ந்தவர் கொரோனாவால் பாதிப்பு + "||" + Injured by Corona, a member of the foreign team in Tokyo

டோக்கியோவில் வெளிநாட்டு அணியை சேர்ந்தவர் கொரோனாவால் பாதிப்பு

டோக்கியோவில் வெளிநாட்டு அணியை சேர்ந்தவர் கொரோனாவால் பாதிப்பு
டோக்கியோவில் வெளிநாட்டு அணியை சேர்ந்தவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
டோக்கியோ, 

ஒலிம்பிக் போட்டி தொடங்க இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் டோக்கியோவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு இருந்தாலும் கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. ஒலிம்பிக் போட்டி அமைப்பு குழுவினர் ஏற்பாடு செய்திருத்த இடத்தில் தங்கி இருந்த வெளிநாட்டு அணியை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக போட்டி அமைப்பு குழுவின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வீரரா? அல்லது வீராங்கனையா? என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. ஜப்பானுக்கு வந்து தங்கிய பிறகு வெளிநாட்டு அணியை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல்முறையாகும். அத்துடன் போட்டிக்கான ஏற்பாடுகளை கவனிக்கும் 4 காண்டிராக்டர்களும் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ரஷிய ரக்பி அணியின் நிர்வாக ஊழியர் ஒருவர் கொரோனா பாதிப்பு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.