ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு; செக்குடியரசு கைப்பந்து வீரர் பாதிப்பு


ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு; செக்குடியரசு கைப்பந்து வீரர் பாதிப்பு
x
தினத்தந்தி 19 July 2021 11:53 PM GMT (Updated: 19 July 2021 11:53 PM GMT)

ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பால் செக்குடியரசு கைப்பந்து வீரர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

டோக்கியோ, 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடங்க இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் அங்குள்ள ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஒலிம்பிக் கிராமத்தில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட வழக்கமான பரிசோதனையில் தென்ஆப்பிரிக்க கால்பந்து அணியின் 2 வீரர்கள் உள்பட 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் செக்குடியரசு நாட்டை சேர்ந்த பீச் வாலிபால் (கடற்கரை கைப்பந்து) வீரர் ஆன்ட்ரெஜ் பெருசிக் நேற்று கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார். இதனால் அவர் பங்கேற்கும் போட்டியை தள்ளிவைக்கும்படி அந்த நாட்டு அணியின் நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதேபோல் அங்குள்ள நாரிடா பகுதியில் தங்கி பயிற்சியில் ஈடுபட்ட அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் அணியின் வீராங்கனை ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.

Next Story