டோக்கியோ ஒலிம்பிக்கில் மேலும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு


டோக்கியோ ஒலிம்பிக்கில் மேலும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 22 July 2021 3:47 AM GMT (Updated: 2021-07-22T09:17:55+05:30)

டோக்கியோ ஒலிம்பிக்கில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக போட்டி அமைப்பு குழுவினர் நேற்று தெரிவித்தனர்.

டோக்கியோ, 

ஒலிம்பிக் போட்டி நடக்க உள்ள டோக்கியோவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அங்கு அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒலிம்பிக்கில் பங்கேற்க டோக்கியோ வந்து இருக்கும் வீரர், வீராங்கனை குழுவை சேர்ந்தவர்களில் ஒருவர் உள்பட மேலும் 10 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக போட்டி அமைப்பு குழுவினர் நேற்று தெரிவித்தனர். இதன் மூலம் இந்த மாத தொடக்கத்தில் இருந்து ஒலிம்பிக் போட்டி தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டு கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது.

Next Story