ஒலிம்பிக் துவக்கவிழா: அகதிகள் ஒலிம்பிக் அணி வீரர்கள் அணிவகுப்பு


ஒலிம்பிக் துவக்கவிழா: அகதிகள் ஒலிம்பிக் அணி வீரர்கள் அணிவகுப்பு
x
தினத்தந்தி 23 July 2021 12:21 PM GMT (Updated: 23 July 2021 12:21 PM GMT)

ஒலிம்பிக் துவக்கவிழாவில் அகதிகள் ஒலிம்பிக் அணி வீரர்கள் அணிவகுப்பு நடைபெற்றது.

டோக்கியோ,

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்கியது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் துவக்கவிழா தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 204 நாட்டு அணியினரும் தங்களது தேசிய கொடியுடன் மிடுக்காக அணிவகுத்து செல்ல தொடங்கினர். அணிவகுப்பில் ஜப்பானிய தேசியக்கொடி முதலில் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், ஒலிம்பிக் போட்டியில் இரண்டாவது முறையாக பங்கேற்கும் 'அகதிகள் ஒலிம்பிக் அணி’ டோக்கியோ ஒலிம்பிக் துவக்கவிழாவில் தங்கள் கொடியுடன் அணிவகுத்து சென்றனர். அகதிகள் ஒலிம்பிக் அணி 2016 ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் முதல்முறையாக பங்கேற்றது.

போர் உள்ளிட்ட காரணங்களுக்காக தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் அகதிகளாக தங்கியுள்ளவர்களில் ஒலிம்பிக் கனவை நனவாக்கும் வகையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி புதிதாக அகதிகள் ஒலிம்பிக் அணி என்ற அணியை உருவாக்கியது. 

இந்த அணியில் சொந்தநாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தங்கியுள்ள அகதிகள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த அணி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் நிர்வகிக்கப்படுகிறது. அகதிகள் ஒலிம்பிக் அணியில் 29 வீரர்-வீராங்கணைகள் இடம்பெற்றுள்ளனர்.

Next Story