105 வயது தடகள வீராங்கனை மரணம்


105 வயது தடகள வீராங்கனை மரணம்
x
தினத்தந்தி 1 Aug 2021 1:01 AM GMT (Updated: 1 Aug 2021 1:01 AM GMT)

தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பல பதக்கங்கள் வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

சண்டிகர், 

சண்டிகரை சேர்ந்த மூத்தோர் தடகள வீராங்கனையான மன் கவுர் மாரடைப்பால் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 105. அவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். 90 வயதுக்கு பிறகு தடகளத்தில் அடியெடுத்து வைத்த மன் கவுர் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பல பதக்கங்கள் வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 100 வயதுக்கு பிறகும் தணியாத தாகத்துடன் மூத்தோர் 100 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்ற அவர் 2017-ம் ஆண்டு ஆக்லாந்தில் நடந்த உலக மாஸ்டர்ஸ் விளையாட்டு போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன் போலந்தில் நடந்த உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலும் தங்கம் வென்றுள்ளார். மன் கவுர் மறைவுக்கு பஞ்சாப் மாநில முதல்-மந்திரி அமரிந்தர் சிங் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Next Story