பிற விளையாட்டு

உலக டேபிள் டென்னிஸ்: இந்திய ஜோடிகள் கால்இறுதிக்கு தகுதி + "||" + World Table Tennis: Indian pair qualify for quarterfinals

உலக டேபிள் டென்னிஸ்: இந்திய ஜோடிகள் கால்இறுதிக்கு தகுதி

உலக டேபிள் டென்னிஸ்: இந்திய ஜோடிகள் கால்இறுதிக்கு தகுதி
உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஜோடிகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
ஹூஸ்டன்,

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில், கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் மனிகா பத்ரா-அர்ச்சனா காமத் ஜோடி ஹங்கேரியின் டோரா மடாராஸ்-ஜியார்ஜினா போடா ஜோடியுடன் மோதியது.

இந்த போட்டியில், மனிகா பத்ரா-அர்ச்சனா காமத் ஜோடி 11-4, 11-9, 6-11, 11-7 என்ற செட் கணக்கில் டோரா மடாராஸ்-ஜியார்ஜினா போடா இணையை தோற்கடித்து கால்இறுதியை எட்டியது.

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனிகா பத்ரா-ஜி.சத்யன் (தமிழ்நாடு) இணை சரிவில் இருந்து சாதுர்யமாக மீண்டு வந்து 15-17, 10-12, 12-10, 11-6, 11-7 என்ற செட் கணக்கில் கனாக் ஜா (அமெரிக்கா)-வாங் மான்யு (சீனா) ஜோடியை போராடி வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தது. கால்இறுதி தடையை இந்திய ஜோடிகள் கடந்தால் குறைந்தபட்சம் வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்து விட முடியும்.