புரோ கபடி லீக்; வீரர்களுக்கு கொரோனா தொற்று - போட்டிகளின் அட்டவணையில் மாற்றம்!


புரோ கபடி லீக்; வீரர்களுக்கு கொரோனா தொற்று - போட்டிகளின் அட்டவணையில் மாற்றம்!
x
தினத்தந்தி 25 Jan 2022 7:46 AM GMT (Updated: 25 Jan 2022 7:46 AM GMT)

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இந்த தொடரின் முதல் கட்ட போட்டிகள் நிறைவடைந்துவிட்டன. இப்போது இரண்டாம் கட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

கபடி தொடரில் பங்கேற்கும் வீரர்கள் ‘பயோ-பபிள்’ எனப்படும் தனிமைப்படுத்தலில் இருந்து கொண்டு போட்டிகளில் பங்கேற்று வரும் நிலையிலும் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்த நிலையில், தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இம்மாதம் 25 முதல் 30ந்தேதி வரை நடைபெறவிருந்த போட்டிகளின் அட்டவணை மாற்றப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட வீரர்கள் மற்றும் அவர்கள் எந்த அணியை சார்ந்தவர்கள் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

Next Story