தேசிய இளையோர் தடகள போட்டிக்கான தமிழக அணியில் 49 வீரர், வீராங்கனைகள்


தேசிய இளையோர் தடகள போட்டிக்கான தமிழக அணியில் 49 வீரர், வீராங்கனைகள்
x

கோப்புப்படம்

18-வது தேசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி கர்நாடக மாநிலம் உடுப்பியில் இன்று முதல் 12-ந் தேதி வரை நடக்கிறது.

சென்னை,

18-வது தேசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி கர்நாடக மாநிலம் உடுப்பியில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 12-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் தமிழக அணியை, தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா அறிவித்துள்ளார்.

தமிழக அணியில் 23 வீரர்களும், 26 வீராங்கனைகளும் இடம் பிடித்துள்ளனர். நிஷோக் (100 மீட்டர் ஓட்டம்), ஷரோன் (200, 400 மீட்டர் ஓட்டம்), விஷ்ணு ஜெரோம், ஜெரோம் சஞ்சய் நிஷாந்த் (400 மீட்டர் தடை ஓட்டம்), அபிநயா (100 மீட்டர் ஓட்டம்), அன்ஷிலின், ரூபிகா (800 மீட்டர் ஓட்டம்), யாமினி (100 மீட்டர் தடை ஓட்டம்), பவீனா (நீளம் தாண்டுதல், டிரிபிள் ஜம்ப்) உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் இதில் இடம் பெற்றுள்ளனர்.


Next Story