மாவட்ட அளவிலான செஸ் போட்டி: கூடலூர் மாணவிகள் சாம்பியன்


மாவட்ட அளவிலான செஸ் போட்டி:  கூடலூர் மாணவிகள் சாம்பியன்
x
தினத்தந்தி 22 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-23T00:15:35+05:30)

மாவட்ட அளவிலான செஸ் போட்டி: கூடலூர் மாணவிகள் சாம்பியன்

நீலகிரி

கூடலூர்

ஊட்டியில் மாவட்ட சதுரங்க கழகம் நடத்திய மாவட்ட அளவிலான செஸ் சாம்பியன்ஷிப் போட்டி உதகை ஒய்.எம். சி. ஏ. பள்ளியில் நடைபெற்றது. 9, 11,13, 15, 17 வயதுக்குட்பட்ட மற்றும் பொது பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. 9 வயதுக்கான போட்டிகளில் கூடலூர் முதல் மைல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சேர்ந்த ஆதினி மாவட்ட அளவில் முதலிடத்தை பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். `11 வயதுக்கான மாணவிகளுக்கான போட்டிகளில் கலந்து கொண்ட டியானி 2-ம் இடத்தையும் பெற்றார். இரண்டாம் இடம் பிடித்த டியானி ஏற்கனவே செஸ் ஒலிம்பியாட் மாவட்ட போட்டியில் முதலிடம் பிடித்து அரசின் சார்பாக 5 நாள் பயிற்சி முகாம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளிக்கூட ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.


Next Story