பல்கலைக்கழக கபடி: செயின்ட் ஜோசப்ஸ் அணி 'சாம்பியன்'


பல்கலைக்கழக கபடி: செயின்ட் ஜோசப்ஸ் அணி சாம்பியன்
x

பல்கலைக்கழக மண்டலங்களுக்கு இடையிலான கபடி போட்டியில் ஜோசப்ஸ் அணி ‘சாம்பியன்’ பட்டம் வென்றது.

சென்னை,

அண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கு இடையிலான கபடி போட்டி காரைக்குடியில் உள்ள ஸ்ரீ ராஜராஜன் என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்தது.

இதன் இறுதிப்போட்டியில் செயின்ட் ஜோசப்ஸ்-இந்துஸ்தான் என்ஜினீயரிங் கல்லூரி அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் செயின்ட் ஜோசப்ஸ் (சென்னை) அணி 46-28 என்ற புள்ளி கணக்கில் இந்துஸ்தானை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


Next Story