டென்னிஸ்

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்:அரைஇறுதியில் பெடரர், வீனஸ் வில்லியம்ஸ் + "||" + Intiyanvels Tennis: In the semi-finals Federer, Venus Williams

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்:அரைஇறுதியில் பெடரர், வீனஸ் வில்லியம்ஸ்

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்:அரைஇறுதியில் பெடரர், வீனஸ் வில்லியம்ஸ்
அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.
இண்டியன்வெல்ஸ்,

அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் கால்இறுதியில் நம்பர் ஒன் வீரரும், நடப்பு சாம்பியனுமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), 26-ம் நிலை வீரர் சுங் ஹயோனை (தென்கொரியா) எதிர்கொண்டார். இதில் 12 ஏஸ் சர்வீஸ் வீசி அசத்திய பெடரர் 7-5, 6-1 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறினார். இந்த சீசனில் தோல்வியை சந்திக்காமல் பெடரர் தொடர்ச்சியாக பெற்ற 16-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் ஒரு ஆண்டில் தனது சிறந்த தொடக்கமான 2006-ம் ஆண்டு சாதனையை சமன் செய்தார். பெடரர் அடுத்து போர்னா கோரிச்சுடன் (குரோஷியா) மோதுகிறார்.


பெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 37 வயதான வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-3, 6-2 என்ற நேர்செட்டில்சுவாரஸ் நவரோவை (ஸ்பெயின்) தோற்கடித்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். மற்றொரு ஆட்டத்தில் இளம் வீராங்கனை டாரியா கசட்கினா (ரஷியா) 6-0, 6-2 என்ற நேர்செட்டில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பருக்கு (ஜெர்மனி) அதிர்ச்சி அளித்தார்.