டென்னிஸ்

மியாமி டென்னிஸ்: ஹாலெப், யுகி பாம்ப்ரி வெற்றி + "||" + Miami Tennis: Hallep, Yuki Pompry Win

மியாமி டென்னிஸ்: ஹாலெப், யுகி பாம்ப்ரி வெற்றி

மியாமி டென்னிஸ்: ஹாலெப், யுகி பாம்ப்ரி வெற்றி
மியாமி டென்னிஸ் போட்டியில் ஹாலெப், யுகி பாம்ப்ரி வெற்றி பெற்றனர்.
மியாமி,

மியாமி சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) 3-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் ஓசியன் டோடினை (பிரான்ஸ்) தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.


ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 107-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி 7-5, 6-3 என்ற நேர்செட்டில் 75-ம் நிலை வீரர் மிர்சா பாசிச்சை (போஸ்னியா) வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.