டென்னிஸ்

மியாமி டென்னிஸ்: ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி + "||" + Miami Tennis: Jokovich's shock defeat

மியாமி டென்னிஸ்: ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

மியாமி டென்னிஸ்: ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி
மியாமி டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
மியாமி,

மியாமி சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 6 முறை சாம்பியனும், முன்னாள் நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 3-6, 4-6 என்ற நேர்செட்டில் 47-ம் நிலை வீரர் பெனோய்ட் பேர்ரிடம் (பிரான்ஸ்) அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். இதன் மூலம் மியாமி டென்னிசில் 16 ஆட்டங்களில் தொடர்ச்சியாக பெற்ற அவரது வெற்றி பயணம் முடிவுக்கு வந்தது. மற்றொரு ஆட்டத்தில் அர்ஜென்டினா வீரர் ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோ 6-4, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் ராபின் ஹாஸ்சை (நெதர்லாந்து) தோற்கடித்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவரும், ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனுமான கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-0, 4-6, 4-6 என்ற செட் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியன் மோனிகா புய்க்கிடம் (பியூர்டோரிகா) தோல்வி கண்டு நடையை கட்டினார்.