டென்னிஸ்

மியாமி டென்னிஸ்: அரைஇறுதிக்கு அஸரென்கா முன்னேற்றம் + "||" + Miami Tennis: Azarenka's progress to the semi-final

மியாமி டென்னிஸ்: அரைஇறுதிக்கு அஸரென்கா முன்னேற்றம்

மியாமி டென்னிஸ்: அரைஇறுதிக்கு அஸரென்கா முன்னேற்றம்
மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

மியாமி,

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) 7–5, 6–3 என்ற நேர்செட்டில் கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார். மற்றொரு கால்இறுதியில் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 6–1, 6–2 என்ற நேர்செட்டில் ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பருக்கு அதிர்ச்சி அளித்தார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4–வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 5–வது இடத்தில் உள்ள ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6–4, 6–4 என்ற நேர்செட்டில் நிக் கைர்ஜியோஸ்சை (ஆஸ்திரேலியா) தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். மார்ட்டின் டெல்போட்ரோ (அர்ஜென்டினா), கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), மிலோஸ் ராவ்னிக் (கனடா) ஆகியோரும் கால்இறுதியை எட்டினர்.