டென்னிஸ்

மியாமி டென்னிஸ்: வீனஸ் வில்லியம்ஸ் தோல்வி + "||" + Miami Tennis: Venus Williams failed

மியாமி டென்னிஸ்: வீனஸ் வில்லியம்ஸ் தோல்வி

மியாமி டென்னிஸ்: வீனஸ் வில்லியம்ஸ் தோல்வி
மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

மியாமி,

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), சக நாட்டவரும், 93–ம் நிலை வீராங்கனையுமான டேனிலே காலின்ஸ்சை சந்தித்தார். இதில் வீனஸ் வில்லியம்ஸ் 2–6, 3–6 என்ற நேர்செட்டில் டேனிலே காலின்ஸ்சிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்டாபென்கோ (லாத்வியா) 7–6 (7–3), 7–6 (7–5) என்ற நேர்செட்டில் ஸ்விடோலினாவை (உக்ரைன்) வெளியேற்றி அரைஇறுதியை எட்டினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 6–வது இடத்தில் உள்ள ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோ (அர்ஜென்டினா) 5–7, 7–6 (7–1), 7–6 (7–3) என்ற செட் கணக்கில் மிலோஸ் ராவ்னிக் (கனடா) சாய்த்து அரைஇறுதிக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இந்த ஆட்டம் 3 மணி நேரம் நீடித்தது. டெல்போட்ரோ தொடர்ச்சியாக பெற்ற 15–வது வெற்றி இதுவாகும்.


ஆசிரியரின் தேர்வுகள்...