டென்னிஸ்

உலக டென்னிஸ் தரவரிசையில் ரபெல் நடால், சிமோனா ஹாலெப் தொடர்ந்து முதலிடம் + "||" + World Tennis Rank

உலக டென்னிஸ் தரவரிசையில் ரபெல் நடால், சிமோனா ஹாலெப் தொடர்ந்து முதலிடம்

உலக டென்னிஸ் தரவரிசையில் ரபெல் நடால், சிமோனா ஹாலெப் தொடர்ந்து முதலிடம்
உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது.
மாட்ரிட், 

உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் (8,770 புள்ளிகள்) முதலிடத்திலும், சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் (8,670 புள்ளிகள்) 2-வது இடத்திலும், குரோஷியா வீரர் மரின் சிலிச் (4,985 புள்ளிகள்) 3-வது இடத்திலும், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்ரேவ் (4,925 புள்ளிகள்) 4-வது இடத்திலும், பல்கேரியா வீரர் டிமிட்ரோவ் (4,635 புள்ளிகள்) 5-வது இடத்திலும், அர்ஜென்டினா வீரர் ஜூயன் மார்ட்டின் டெல்போட்ரோ (4,470 புள்ளிகள்) 6-வது இடத்திலும், ஆஸ்திரியா வீரர் டோமினிச் திம் (3,665 புள்ளிகள்) 7-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் (3,390 புள்ளிகள்) 8-வது இடத்திலும், அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் (3,125 புள்ளிகள்) 9-வது இடத்திலும், பெல்ஜியம் வீரர் டேவிட் கோபின் (3,110 புள்ளிகள்) 10-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகின்றனர். இந்திய வீரர்கள் யுகி பாம்ப்ரி 22 இடம் முன்னேறி 83-வது இடத்தையும், ராம்குமார் 17 இடம் ஏற்றம் கண்டு 116-வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் ரோகன் போபண்ணா 19-வது இடமும், திவிஜ் சரண் ஒரு இடம் முன்னேறி 41-வது இடமும், லியாண்டர் பெயஸ் 4 இடம் ஏற்றம் பெற்று 49-வது இடமும், புரவ் ராஜா 4 இடம் முன்னேற்றம் கண்டு 66-வது இடமும் பெற்றுள்ளனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் (8,140 புள்ளிகள்) முதலிடத்திலும், டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி (6,790 புள்ளிகள்) 2-வது இடத்திலும், ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா (6,065 புள்ளிகள்) 3-வது இடத்திலும், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா (5,630 புள்ளிகள்) 4-வது இடத்திலும், லாத்வியா வீராங்கனை ஜெலினா ஆஸ்டாபென்கோ (5,307 புள்ளிகள்) 5-வது இடத்திலும், செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா (4,730 புள்ளிகள்) 6-வது இடத்திலும், பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா (4,615 புள்ளிகள்) 7-வது இடத்திலும், அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் (4,276 புள்ளிகள்) 8-வது இடத்திலும், அமெரிக்க வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (3,938 புள்ளிகள்) 9-வது இடத்திலும், செக் குடியரசு வீராங்கனை கிவிடோவா (3,271 புள்ளிகள்) 10-வது இடத்திலும் மாற்றமில்லாமல் நீடிக்கின்றனர். பெண்கள் இரட்டையர் தரவரிசையில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா 24-வது இடத்தில் தொடருகிறார்.