டென்னிஸ்

பார்சிலோனா ஓபன் டென்னிஸ்; ரஃபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேற்றம் + "||" + Barcelona Open Tennis; Rafael Nadal advanced to the semi-finals

பார்சிலோனா ஓபன் டென்னிஸ்; ரஃபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேற்றம்

பார்சிலோனா ஓபன் டென்னிஸ்;  ரஃபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேற்றம்
பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஃபேல் நடால், கிளிசானை வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். #RafaelNadal
பார்சிலோனா, 

பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் நாட்டு வீரர் ரஃபேல் நடால் சுலோவேகியா வீரரான கிளிசானை வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான ரஃபேல் நடால், 140வது இடத்தில் உள்ள சுலோவேகியா நாட்டின் மார்ட்டின் கிளிசானுடன் மோதினார்.


இந்த போட்டியில் நடால் 6-0, 7-5 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். மேலும் நடால் இறுதிப்போட்டியில் வென்று 11வது பார்சிலோனா பட்டத்தினை வெல்வதின் மூலம் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு காலிறுதி போட்டியில் ஸ்பெயினை சேர்ந்த பாப்லோ கார்ரேனோ புஸ்டா, பல்கேரியாவை சேர்ந்த கிரிகர் டிமிட்ரோவை 6-3, 7-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.