டென்னிஸ்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் டொமினிக் திம் + "||" + Madrid Open Tennis: Dominic Thim in the final match

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் டொமினிக் திம்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் டொமினிக் திம்
மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது.

மாட்ரிட், 

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் டொமினிக் திம் (ஆஸ்திரியா) 6–4, 6–2 என்ற நேர் செட் கணக்கில் தென்ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். முன்னதாக டொமினிக் திம் கால்இறுதியில் நேர் செட் கணக்கில் ரபெல் நடாலை (ஸ்பெயின்) விரட்டினார். இந்த தோல்வியின் மூலம் நடால் ‘நம்பர் ஒன்’ இடத்தை இழந்துள்ளார். நாளை வெளியாகும் புதிய தரவரிசையில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் மீண்டும் முதலிட அரியணையில் ஏறுகிறார்.