டென்னிஸ்

ஸ்டட்கர்ட் சர்வதேச டென்னிஸ்: 2வது சுற்றில் குணேஸ்வரன் தோல்வி + "||" + Stuttgart International Tennis: Gunasevaran failure in the 2nd round

ஸ்டட்கர்ட் சர்வதேச டென்னிஸ்: 2வது சுற்றில் குணேஸ்வரன் தோல்வி

ஸ்டட்கர்ட் சர்வதேச டென்னிஸ்: 2வது சுற்றில் குணேஸ்வரன் தோல்வி
ஸ்டட்கர்ட் சர்வதேச டென்னிஸ்போடியில் 2வது சுற்றில் குணேஸ்வரன் தோல்வி அடைந்தார்.
ஸ்டட்கர்ட்,

ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் மெர்சிடஸ் கோப்பைக்கான சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரரான சென்னையைச் சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன், 75-ம் நிலை வீரர் குடோ பெல்லாவை (அர்ஜென்டினா) எதிர்கொண்டார். 1 மணி 29 நிமிடங்கள் போராடிய தரவரிசையில் 169-வது இடம் வகிக்கும் குணேஸ்வரன் 6-7 (4-7), 3-6 என்ற நேர் செட்டில் தோற்று வெளியேறினார். இதில் குணேஸ்வரன் வெற்றி பெற்றிருந்தால் கால்இறுதியில் ரோஜர் பெடரருடன் (சுவிட்சர்லாந்து) மோதும் பொன்னான வாய்ப்பு கிடைத்திருக்கும்.