டென்னிஸ்

ஹாலே சர்வதேச டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு பெடரர் தகுதி + "||" + Halle International Tennis: Federer qualifies for final

ஹாலே சர்வதேச டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு பெடரர் தகுதி

ஹாலே சர்வதேச டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு பெடரர் தகுதி
ஹாலே நகரில் நடந்து வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

ஹாலே, 

ஹாலே நகரில் நடந்து வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

பெடரர் வெற்றி

ஜெர்மனியின் ஹாலே நகரில் கெர்ரி வெபர் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. புல்தரையில் நடக்கும் இந்த போட்டியில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரரும், 9 முறை சாம்பியனுமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், தகுதி நிலை வீரர் அமெரிக்காவின் டெனிஸ் குட்லாவுடன் மோதினார். 12 ஏஸ் சர்வீஸ்கள் போட்டு மிரட்டிய பெடரர் 7–6 (7–1), 7–5 என்ற நேர் செட் கணக்கில் குட்லாவை வெளியேற்றி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். வெற்றியை பெற பெடரருக்கு 1 மணி 26 நிமிடங்கள் தேவைப்பட்டது.

இந்த போட்டியில் அவர் இறுதிசுற்றை எட்டுவது இது 12–வது முறையாகும். அத்துடன் புல்தரை ஆடுகளத்தில் பெடரர் தொடர்ச்சியாக ருசித்த 20–வது வெற்றி இதுவாகும்.

போர்னா கோரிச்

மற்றொரு அரைஇறுதியில் தரவரிசையில் 34–வது இடம் வகிக்கும் குரோஷியாவின் போர்னா கோரிச், ஸ்பெயின் வீரர் ராபர்ட்டோ பாவ்டிஸ்டா அகுத்தை சந்தித்தார். இதில் பாவ்டிஸ்டா அகுத் முதல் செட்டில் 3–2 என்ற கணக்கில் முன்னிலை வகித்த போது காயத்தால் விலகினார். இதையடுத்து போர்னா கோரிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் பெடரர்–போர்னா கோரிச் மோதுகிறார்கள். கோரிச்சுக்கு எதிராக இதற்கு முன்பு 2 முறை மோதியுள்ள பெடரர் இரண்டிலும் வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 36 வயதான பெடரர் இந்த பட்டத்தை வென்றால் மட்டுமே தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்கவைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.