டென்னிஸ்

சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் கால்இறுதிக்கு தகுதி + "||" + International Tennis Tournament American heroine Venus Williams qualifies for Call

சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் கால்இறுதிக்கு தகுதி

சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் கால்இறுதிக்கு தகுதி
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் சிலிகான் வாலி கிளாசிக் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.

கலிபோர்னியா,

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் சிலிகான் வாலி கிளாசிக் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ், இங்கிலாந்தில் ஹீதர் வாட்சனை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் வீனஸ் வில்லியம்ஸ் 6–4, 4–6, 6–0 என்ற செட் கணக்கில் ஹீதர் வாட்சனை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி 6–0, 6–1 என்ற நேர்செட்டில் ஹங்கேரியின் டிமா பாபோஸ்சை எளிதில் தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். கால்இறுதி ஆட்டத்தில் வீனஸ் வில்லியம்ஸ், மரியா சக்காரியை சந்திக்கிறார்.தொடர்புடைய செய்திகள்

1. ராமேசுவரம் அருகே கடற்கரையில் சிக்கிய ஆயுதங்கள் அமெரிக்கா–ரஷியாவில் தயாரானவை
ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் கடற்கரையில் சிக்கிய ஆயுத குவியல் அமெரிக்கா, ரஷியாவில் தயாரிக்கப்பட்டவை என்ற அதிர்ச்சி தகவல் வெடிபொருள் நிபுணர்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது.
2. அமெரிக்காவில் கிரீன் கார்டுக்காக காத்திருக்கும் 6 லட்சம் இந்தியர்கள்
அமெரிக்காவில் 600,000-க்கும் அதிகமான இந்தியர்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிரீன் கார்டுக்காக காத்திருக்கிறார்கள்.
3. உலகைச் சுற்றி...
அமெரிக்காவில் மைக்கேல் புயல் தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது.
4. அமெரிக்கா: பல்கலைக்கழக கட்டிடத்துக்கு இந்திய தம்பதியர் பெயர்
அமெரிக்காவில் பல்கலைக்கழக கட்டிடத்துக்கு இந்திய தம்பதியரின் பெயர் சூட்டப்பட உள்ளது.
5. அமெரிக்கா: ‘மைக்கேல்’ புயல் - பலி எண்ணிக்கை உயர்வு
அமெரிக்காவில் மைக்கேல் புயல் தாக்கத்தினால், பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.