டென்னிஸ்

யு.எஸ் ஓபன் டென்னிஸ்: செரினா வில்லியம்ஸ் வெற்றி + "||" + US Open tennis: Serena Williams win

யு.எஸ் ஓபன் டென்னிஸ்: செரினா வில்லியம்ஸ் வெற்றி

யு.எஸ் ஓபன் டென்னிஸ்: செரினா வில்லியம்ஸ் வெற்றி
யு.எஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் செரினா வில்லியம்ஸ் முதல் சுற்றில் வெற்றிபெற்றார். #SerenaWilliams
நியூயார்க்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது. செப்டம்பர் 9-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் முன்னணி வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.


இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான அமெரிக்காவின் செரினாவில்லியம்ஸ், போலந்து வீராங்கனை மக்தா லினெட்டுடன் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் செரினா வில்லியம்ஸ் 6-4, 6-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

முன்னதாக யு.எஸ் ஓபன் டென்னிஸ் துவக்க போட்டியிலேயே நம்பர் ஒன் வீராங்கனை ரோமானியாவின் சிமோனா ஹாலேப் தோல்வி அடைந்தார். அவர் தரவரிசையில் 44-வது இடம் வகிக்கும் எஸ்டோனியாவின் கைய கனேபியிடம் 6-2, 6-4 என்ற நேர்செட்களில் தோல்வி அடைந்து வெளியேறினார்.

மற்ற ஆட்டங்களில் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), வெரா லாப்கோ (பெலாரஸ்), கமேலி பெகு (ருமேனியா) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டங்களில் ஜாக் சோக் (அமெரிக்கா), கரென் காச்சனோவ் (ரஷியா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.