டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறினார் ரபேல் நடால் + "||" + US Open tennis: Rafael Nadal advanced to 3rd round

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறினார் ரபேல் நடால்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறினார் ரபேல் நடால்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 4வது சுற்றுக்கு முன்னேறினார். #USOpen2018
நியூயார்க்,

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. போட்டியின் ஒற்றையர் பிரிவில் 3வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. இதில் நடப்பு சாம்பியன் ரபெல் நடால் (ஸ்பெயின்), காரென் கச்சனோவை (ரஷ்யா) எதிர் கொண்டார்.


பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முதல் செட்டை 5-7 என்ற புள்ளிக்கணக்கில் கச்சனோவ் கைப்பற்றினார். அதைத்தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டை 6-5 என்ற புள்ளிக்கணக்கில் நடால் கைப்பற்றி அசத்தினார். மூன்றாவது மற்றும் நான்காவது செட்களிலும்  நடால் தனது ஆதிக்கத்தை தொடர்ந்தார்.

இதன்மூலம், ரபெல் நடால் 5 - 7, 6 - 5, 7- 6, 7 - 6 என்ற புள்ளிக் கணக்கில் கச்சனோவை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.